ஈரோட்டில் வரும் ஜூன் 21-ல் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோட்டில் வரும் ஜூன் 21-ல் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
X

பைல் படம்.

மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஈரோட்டில் வரும் ஜூன் 21-ல் நடக்கிறது.

மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 21-ல் நடைபெறவுள்ளது.

ஈரோடு மண்டல மின் பகிர் மான தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறையும் ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு 2-ம் காலாண்டிற்கான மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21-ம் தேதி ஈரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடக்கிறது. எனவே மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் பணியாளர்கள் மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம். மேற்கண்ட தகவலை ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது