அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைப்பு
பேரூராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 1, இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
இதில் திமுக சார்பில் 15-வது வார்டில் போட்டியிட்ட பாண்டியம்மாள் பேரூராட்சி தலைவராக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.இந்த நிலையில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணி கட்சியான. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இது பற்றி அறிந்ததும் திமுக கவுன்சிலர் பாண்டியம்மாள் மயக்கமடைந்தார்.இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரி சித்ரா என்பவர் மன்ற கூட்டத்துக்கு வந்தார்.
ஆனால் காலை 10 மணி வரை திமுக உள்ளிட்ட எந்த உறுப்பினர்களும் வரவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் சித்ரா தேர்தலை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu