கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: பிரபல யூடியூபர் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: பிரபல யூடியூபர் உயிரிழப்பு
X

யூடியூபர் ராகுல்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பிரபல யூடியூபர் ராகுல் உயிரிழந்தார்.

கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பிரபல யூடியூபர் ராகுல் உயிரிழந்தார்.

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் மகன் ராகுல் (வயது 27). கேலி கிண்டல் வீடியோ செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வந்துள்ளார். அதுமூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமடைந்தார். குறிப்பாக, யூடியூப் சேனலில் 3 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணி மகள் தேவிகாஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று இரவு ராகுல் இருசக்கர வாகனத்தில், ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கவுந்தப்பாடி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய இருசக்கர வாகனம், சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதில், ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: பிரபல யூடியூபர் உயிரிழப்பு
இரும்பு தடுப்புகளில் விளம்பரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை..!
சேவல் சண்டை சர்ச்சை 12 பேர் போலீசாரால் பிடிபட்டனர்..!
அந்தியூர் அருகே ஏ.டி.எம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: இன்று ஒரேநாளில் 56 பேர் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கார் ஷோரூம் மேலாளரிடமிருந்து ரூ.6.20 லட்சம் பறிமுதல்!
ஈரோடு மாவட்டத்தில் சூதாட்டம்  ஜோர் 20 பேர் கைது..!
பொங்கல் பண்டிகையால் 150 மாடுகளுக்கு வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!
கோபி பிகேஆர் கல்லூரியில் ஜனவரி 21, 22-ல் இருநாள் கருத்தரங்கு விழா!
ஈரோடு  மாவட்டத்தில் காணாமல் போன 335 பேர் மீட்பு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் : ஒவ்வொரு வீடாகச் சென்று தி.மு.க.வினர் வாக்கு சேகரிப்பு
டாஸ்மாக் விடுமுறை தடை மீறி மது விற்ற 6 பேர் கைது ..! 192 பாட்டில்கள் பறிமுதல்..!
யானையின் தாக்குதலால் முதியவர் பலி: மலைகிராமங்களில் பதட்டம்!