செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்: கலெக்டர்

செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்: கலெக்டர்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் 7.41 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்‌.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்பட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. பொங்கல் தொகுப்புகள் மஞ்சப்பைகளில் வைத்து வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட அட்டை தாரர்களுக்கு ஜனவரி 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.

இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்ப அட்டைகள் ஆயிரத்து 382 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்புபினை வரும் ஜன.4ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தொடர்புடைய நியாய விலை கடைகளுக்கு சென்று கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!