ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் எடுத்த படம்.
ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா இன்று (ஜன.11) கொண்டாடப்பட்டது.
ஈரோடு திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறையின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா இந்த ஆண்டு இன்று (ஜன.11) நடைபெற்றது.
இந்தக் விழாவிற்குக் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை தாங்கினார். முதல்வர் ஹெச்.வாசுதேவன் முன்னிலை வகித்தார். விழாவில், அனைத்துத் துறைகளின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரில்லாப் பணியாளர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு உற்சாகத்தோடு பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
மேலும், அனைத்துத்துறை மாணவ, மாணவியர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று பாரம்பரிய பொருட்களைக் காட்சிப்படுத்தியதோடு நமது பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்தும் பொருட்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சலங்கையாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், வள்ளிக்கும்மி, புலியாட்டம் ஆகிய கிராமியக் கலைகளை மண் மனம் மாறாத பாரம்பரிய முறையில் நிகழ்த்திக் காட்டினர்.
அதைத்தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு உறி அடிக்கும் போட்டியும் நடைபெற்றது. இவ்விழாவை தமிழ்த்துறைத் தலைவர் ப.தினகரன் மற்றும் துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu