/* */

கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் வரும் 17ல் பொங்கல் விழா

பவானி அடுத்த கவுந்தப்பாடி புதுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் வரும் 17ல்  பொங்கல் விழா
X

கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் கம்பத்தில் பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி அம்மனை வழிபட்டு விரதம் இருந்து வருகிறார்கள்.

கம்பத்துக்கு புனித நீர் தொடர்ந்து 10-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11-ந் தேதி இரவு கம்பத்திற்கு பூவோடு வைக்கப்பட்டது. கம்பத்தை சுற்றி வாலிபர்கள், சிறுவர்கள் கம்ப ஆட்டம் ஆடினார்கள். கம்பத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு வேப்பிலையுடன் பெண்கள் புனித ஊற்றி வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா, வரும் 17-ந் தேதி (வியாழக்கிழமை ) நடைபெறுகிறது. கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் நந்திஸ்வரி செய்து வருகிறார்.

Updated On: 14 March 2022 12:45 AM GMT

Related News