அத்தாணி பேரூராட்சி 12வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தம்

அத்தாணி பேரூராட்சி 12வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தம்
X

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்காளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்

அத்தாணி பேரூராட்சி 12வது வார்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டில் உள்ளன. 12வது வார்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, பகல் 12 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக மாற்று வாக்கு பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு திரும்ப வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் மீண்டும் அரை மணி நேரத்திற்கு பிறகு மாற்றி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து வாக்குபதிவு மீண்டும் நிறுத்தப்பட்டது.

இதனால் ஜனநாயக கடமையாற்ற வாக்காளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த 12வது வார்டு அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தாணி பேரூராட்சி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்தில் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business