சத்தியமங்கலத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்ட போது எடுத்த படம்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கரை விமர்சித்த மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல் தலைமையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் தொகுதி செயலாளர் தம்பிராஜன்,மற்றும் நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.அப்போது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.


ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் துணை பொது செயலாளர் விடுதலை செல்வன் மற்றும் மகளிரணி, நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அப்போது போலீசாருக்கும், ஆதித்தமிழர் பேரவையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா