அந்தியூரில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

அந்தியூரில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
X

பைல் படம்

அந்தியூரில் பல்வேறு இடங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பல்வேறு இடங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

இதனடிப்படையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் பஸ் நிலையம் மற்றும் அந்தந்த அங்கன்வாடி மையங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த குழந்தைகள் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தியூர் தாலுக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai marketing future