ஈரோடு: சித்தோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த பாட்டி, பேரன் கைது!

ஈரோடு: சித்தோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த பாட்டி, பேரன் கைது!
X

கைது செய்யப்பட்ட திலகா, சந்தோஷ்குமார்.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த பாட்டி மற்றும் பேரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சித்தோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த பாட்டி மற்றும் பேரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்து வந்தது. இதுகுறித்து சித்தோடு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சித்தோடு ஓடைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் சந்தோஷ் குமார் (வயது 20) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து போதை மாத்திரைகள் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக வாங்கி, அதே பகுதியைச் சேர்ந்த அவரது பாட்டியான ஆறுமுகம் மனைவி திலகா (வயது 65) என்பவரிடம் கொடுத்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பாட்டி, பேரன் இருவரையும் கைது செய்த, போலீசார் அவர்களிடம் இருந்து 95 போதை மாத்திரைகள், ஊசி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

Next Story