பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட மாரியப்பன்

பவானி-அந்தியூர் பிரிவில் பேக்கரியில் மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி-அந்தியூர் பிரிவில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் சோதனை செய்தனர். அப்போது, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு அரசின் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மது விற்பனையில் ஈடுபட்ட மாரியப்பன் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 42 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, பேக்கரிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!