ஈரோடு: காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

ஈரோடு: காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
X
காவலர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது

தமிழக காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 134 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் கைரேகை மாதிரி சேகரிக்கப்பட்டு, குற்றப்பதிவுகள், கடந்த காலங்களில் இருந்ததா என ஆராயப்பட்டு வருகிறது.

மேலும், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 134 பேருக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை துவங்கியது. அதன் பிறகே பயிற்சி பெற தகுதிக்கான ஒப்புதல் அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!