பவானியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

பவானியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
X

விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள்.

பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

காவல்துறையினர் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை குறைக்கும் வகையில் காவல்துறையினர் சார்பில், வருடம்தோறும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பவானியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையினர் சார்பில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் தடகள போட்டி நடத்தப்பட்டது.

இதில் பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் பலர் பங்கேற்று விளையாடினர்.இதில் 100 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர் தடகள ஓட்டம், குண்டெறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதற்கு முன்னதாக போட்டியினை பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தீபக்சிவாச் தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓவிற்கு எப்படி அப்லே  பண்றது அப்டிங்கிறத பாப்போம்