பெருந்துறை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெருந்துறை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

பெருந்துறை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் பகுதியை சேர்ந்தவர் செல்வன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (வயது 20). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், பவித்ரா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்தார். இதனால் அவர் சரியாக சாப்பிட முடியாமல் அவதி அடைந்து வந்ததுள்ளார். இந்நிலையில், தனியாக இருந்த பவித்ரா வீட்டில் உள்ள ஒரு அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, திங்களூர் போலீசார் பவித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!