சித்தோடு அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு

சித்தோடு அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு
X

பைல் படம்.

சித்தோடு அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

சித்தோடு மாகாளியம்மன் கோவில் முதலியார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று, குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டி விட்டு, தஞ்சாவூர் சென்று உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கச்செயின், தோடு, மோதிரம், தங்க நாணயம் என நான்கு பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!