ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட திருநிறைச்செல்வன்.

ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பெரியவலசு சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். எலக்ட்ரீசியன். இவரது மனைவி மணிமேகலை. தறிப்பட்டறை தொழிலாளி. இவர்களது மகன் திருநிறைச்செல்வன் (வயது 16). நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருநிறைச்செல்வன் திடீரென பெட்ரோலை குடித்தார். இதையடுத்து திருநிறைச்செல்வன் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் குணமடைந்தார். சிறிது நாளில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மீண்டும் பெட்ரோல் குடித்ததை பெற்றோர் கண்டித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருநிறைச்செல்வன் வீட்டின் வெளியே உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே திருநிறைச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!