நாயை அடித்து கொன்று பேஸ்புக்கில் படத்தை பதிவிட்ட தேனி வாலிபர் மீது வழக்குப்பதிவு
பைல் படம்.
பேஸ்புக்கில் தினேஷ் என்ற பெயரில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இறந்த போன ஒரு நாயின் 2 புகைப்படங்களை தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். படத்திற்கு கீழே “தான் வாங்கி வச்ச புது செருப்புல அடிக்கடி அசிங்கம் செய்து வந்ததால் போட்டு தள்ளிட்டேன்" என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஈரோடு பழையபாளையம், சுத்தானந்தன் நகரை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விலங்குகள் வதைதடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நாயை அடித்து கொன்று விட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வாலிபர் குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் தேனி மாவட்டம், பெரியகுளம், மங்களம் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரது மகன் தினேஷ் (25) என்பது தெரியவந்துள்ளது.
இவர், சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூரில் தங்கி சென்டரிங் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 9 ம் தேதி தினேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் நாயை கொன்று விட்டதாக புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார். தவறான முறையில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயமுறுத்தலை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட தினேேஷை தேடி வருகிறோம்,” என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu