ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு: இளம்பெண் உள்பட 2 பேர் கைது

ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு: இளம்பெண் உள்பட 2 பேர் கைது
X
ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறித்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறித்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் ரகு (வயது 29). தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த 13ம் தேதி ஈரோடு செங்கோடம்பள்ளம் மாருதிநகரில் தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு முன்பு நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரகுவை பார்த்து தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். பின்னர், இதுகுறித்து ரகு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரகுவிடம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் மெய்யரசன் (23) என்பவர் பணத்தை பறித்ததும், இதற்கு உடந்தையாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவதநல்லி பகுதியை சேர்ந்த சுரேசின் மகள் வைஷ்ணவி (24) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story
Similar Posts
தி காவேரி பொறியியல் கல்லுாரியில் தொழில் முனைவோர் திறன் பயிற்சி
மகளிா் குழுக்கள் மற்றும் விவசாயிகளின் இயற்கை சந்தை
சாயக்கழிவுகளால் நஞ்சாகும் காவிரி
பெண்கள் தின மாரத்தான்
நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் 17வது விளையாட்டு விழா
ஈரோடு சந்தையில் காய்கறி விலை குறைவு
பவானி ஆப்பக்கூடலில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
அந்தியூரில் பணி மந்தமாக நடைபெறும் சிறுபாலம் கட்டும் பணி
பராமரிப்பின்றி ஏரி சிறுவர் பூங்கா, சிறுவர்கள் ஏமாற்றம்
ஈரோட்டில் ஏலச்சீட்டு மோசடி
ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி: தென்பட்ட அரிய வகை பறவைகள்
ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு: இளம்பெண் உள்பட 2 பேர் கைது
அந்தியூர் அருகே இளம்பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை