டி.என்.பாளையம் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது‌

டி.என்.பாளையம் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது‌
X

கைது செய்யப்பட்ட ராமசந்திரன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள மறைவான இடத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார். போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பது தெரியவந்தது. ராமசந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 250 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!