பவானி கூடுதுறையில் சாலை விபத்து தவிர்ப்பது குறித்து போலீசார்விழிப்புணர்வு
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பரிதபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில்லா மாநிலமாக மாற்றுவோம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் பவானி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
இதில் பவானி போக்குவரத்து ஆய்வாளர் பாலசுப்பரமணி மற்றும் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் பவானி கூடுதுறையில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் கார் ஓட்டுநர்கள் ஆகியோர் மத்தியில் சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை எப்படி தவிர்ப்பது, சாலையோரம் வாகனத்தை பார்க் செய்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கிடைக்க கூடிய தண்டனைகள் உள்ளிட்ட அரசு வழிகாட்டு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மேலும் விபத்தில்லா மாநிலமாக மாற்ற ஓட்டுநர்கள் அனைவரும் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போக்குவரத்து ஆய்வாளர் பாலசுப்பரமணி கேட்டுகொண்டதையடுத்து, நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌனஞ்சலி செலுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu