அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு
X

அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த 3 பேரிடம் காவல்துறையினர்விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மறவன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 50). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று (25ம் தேதி) மாலை அந்தியூரிலிருந்து பர்கூர் கொங்காடை செல்லும் அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார்.

அப்போது, தாமரைக்கரையிலிருந்து கொங்காடை நோக்கி பேருந்தை ஓட்டியபடி வந்து கொண்டிருந்தார். அப்போது, பேருந்து தொள்ளிப்பிரிவு அருகே சென்ற போது, பின்னால், வந்த இருசக்கர வாகனத்துக்கு வழிவிடவில்லை என கூறப்படுகிறது.

இதனால், பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த தாளக்கரையைச் சேர்ந்த தேவராஜ், சிவராஜ், தட்டக்கரையைச் சேர்ந்த சதீஸ் ஆகிய மூவரும் பேருந்தின் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு பேருந்து மீது கற்களை வீசினர். இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைந்து நொறுங்கியது. இதனால், பேருந்தில் பயணம் செய்த 3 பயணிகள் சிறு காயமடைந்தனர்.

இதனையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், அவர்கள் மூவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், தேவராஜ் மதுபோதையில் இருந்ததால் கீழே விழுந்து மயக்க நிலையை அடைந்தார்.

இதனையடுத்து, அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இதுகுறித்து, பர்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!