பவானி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

பவானி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
X

கைது செய்யப்பட பிரதீப்.

பவானி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பண்டார அப்புச்சி கோவில் பின்புறம் கஞ்சா விற்பதாக கிடைத்த, தகவலின் பேரில், பவானி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார், அங்கு சென்று பார்த்த போது சொக்காரம்மன் காடு கோட்டை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த டேவிட் என்கிற பிரதீப் (வயது 29) என்பவர் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, பிரதீப்பை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture