சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது: பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல்!

சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது: பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல்!
X
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக சென்னிமலை வருவாய்த்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வருவாய்த்துறையினர், சென்னிமலை போலீசாருடன் அங்கு சென்று பார்த்தபோது பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் டிப்பர் லாரியில் கிராவல் மண் எடுத்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, கிராவல் மண் கடத்தியதாக சென்னிமலை அறச்சலூர் ரோடு எம்.எஸ்.கே.காலனியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் செந்தில் (வயது 52), தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா அயோத்திபட்டியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் கார்த்திக் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தையும், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!