சத்தியமங்கலம் அருகே மான் கறி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது!

சத்தியமங்கலம் அருகே மான் கறி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது!
X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மான் கறி விற்றதாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே மான் கறி விற்றதாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் நரசாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மான் கறி விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் நரசாபுரம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் புகுந்து சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு 10 கிலோ மான் கறியை கூறுகளாக போட்டு பாலித்தீன் பைகளில் போட்டு விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 40) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சுஜில்கரையை சேர்ந்த குமார் (வயது 25) என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய நரசாபுரத்தை சேர்ந்த பாலு (வயது 19), தமிழ்செல்வன் (வயது 22) ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story
Similar Posts
அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை பணி குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு!
பண்ணை வீட்டில் 11 மாதமாக அடைத்து வேலை வாங்கிய கொடூரம்
தீவிரவாத தாக்குதலை கண்டித்து தாராபுரத்தில் கண்டனக் கொந்தளிப்பு
சிந்தலவாடி மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
ராஜேந்திரன் கொலை வழக்கு, இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்
குடிநீர் குழாய் அமைப்பில் சாலை சீரமைக்காததால் மக்கள் அவதி
மஞ்சள் பையில் கோவில் ஆவணங்கள் - போலீசில் ஒப்படைப்பு
104.6 டிகிரி வெப்பம் – வாட்டும் வெயிலில் மக்கள் அலறல்
சேலம் கோட்டத்தின் 32 கிளைகளிலும் “ஏசி” ஓய்வறை
கஞ்சா மது பாட்டில் வைத்திருந்த மூன்று பேர் கைது
சேலம் மூதாட்டியின் கைபேசி பறிப்பு மூவர் கைது
தாய் அகர் – எழுத்து போட்டியில் நாமக்கல் மாணவி சாதனை
மானை வேட்டையாடி மான் இறைச்சி விற்ற  பெண் கைது, இருவர் தலைமறைவு