அந்தியூர் அருகே மின்மோட்டார் திருட முயன்ற 3 பேர் கைது!

அந்தியூர் அருகே மின்மோட்டார் திருட முயன்ற 3 பேர் கைது!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மின்மோட்டார் திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே மின்மோட்டார் திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் ஏரித்தோட்டத்தை சேர்ந்தவர் அருள் (வயது 40). விவசாயி. நேற்று இவர் தன்னுடைய தோட்டத்துக்கு சென்றார். அப்போது, அவருடைய தோட்டத்தில் இருந்த மோட்டார் உள்ளிட்ட பொருட்களை 2 பேர் திருடி இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டிருந்ததை கண்டார்.

உடனே அவர் 'திருடன் திருடன்' என சத்தம் போடவே 2 பேரும் மோட்டார் மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர். எனினும் அருள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஓடிச்சென்று ஒரு வரை பிடித்தார். மற்றொருவர் தப்பிவிட்டார்.

பிடிபட்டவர் அந்தியூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் அந்தியூா வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த பிரதீப் (வயது 25) என்பதும். அவர் அருள் தோட்டத்தில் மோட்டார் திருட முயன்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, பிரதீப்பை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரதீப் கொடுத்த தகவலின் பேரில் இதில் தொடர்புடைய அந்தியூர் தேர் வீதியை சேர்ந்த தேவராஜ் (39), கேரளாவை சேர்ந்த மனோஜ் (39) ஆகியோரையும் கைது செய்தனர்.

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்