ஈரோட்டில் நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!

ஈரோட்டில் நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் சூரம்பட்டி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன்நகரை சேர்ந்த சம்சுதீன் (வயது 19) மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
தொடர்ந்து, அவர்களிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் ரயில் நிலையம் பகுதியிலும், ஈரோடு பார்க் ரோட்டில் நடந்து சென்ற 2 பேரிடம் செல்போன்களை பறித்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, சம்சுதீன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu