கோபி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது: 600 கிலோ பறிமுதல்..!

கோபி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது: 600 கிலோ பறிமுதல்..!
X

ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்திய நவநீதகிருஷ்ணன்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார், ஆம்னி கார், 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கோபி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார், ஆம்னி கார், 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், ஈரோடு சரக காவல் துணைக்கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டம் சிறுவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மல்லிபாளையம் - நம்பியூர் ரோடு, அயலூர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் அயலூர் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக வந்த ஆம்னி கார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, 12 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர் கோபி கரட்டுபாளையம கோரமடையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 39) என்பதும், இவர் பொதுமக்களிடமிருந்து ரேசன் அரிசியை வாங்கி நம்பியூர் மற்றும் குன்னத்தூர் பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது .

இதனையடுத்து, நவநீதகிருஷ்ணனை கைது செய்த போலீசார், 12 மூட்டைகளில் சுமார் 600 கிலோ ரேசன் அரிசியும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் வாகனத்தையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil