கோபிச்செட்டிப்பாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கோபிச்செட்டிப்பாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட குமார்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 50) என்பவர் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 5 போலி லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்