பர்கூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

பர்கூர் அருகே கஞ்சா விற்றவர் கைது
X

முருகேசன் (எ) முருகன்

அந்தியூர் அடுத்த பர்கூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட தம்முரெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் தம்முரெட்டி பேருந்து நிறுத்தத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த முருகேசன் (எ) முருகன் (30) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி