சித்தோடு அருகே செல்போன் திருடிய நபரை கைது செய்த போலீசார்

சித்தோடு அருகே செல்போன் திருடிய நபரை கைது செய்த போலீசார்
X

பைல் படம்.

சித்தோடு அருகே வீடு புகுந்து செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நல்ல கவுண்டன்பாளையம் கன்னிமார்காடு பகுதி சேர்ந்தவர் ஸ்ரீரங்கன், இவருடைய மகன் ஆறுமுகம். இவருடைய சகோதரன் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போன் தனது வீட்டில் சார்ஜர் போடுவதற்காக வைத்திருந்த போது, வாலிபர் ஒருவர் செல்போன் திருடிக் கொண்டு ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவனை மடக்கிப் பிடித்து சித்தோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, சித்தோடு போலீசார் விசாரணை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்தவர் அஜீத் குமார் (வயது 17) என்பது தெரிய வந்தது. போலீசார் அஜீத் குமாரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்