அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

அந்தியூர் காவல் நிலையம் பைல் படம்

அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிரம்மதேசம்பாலம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் ஆய்வு செய்ததில், அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் வீதியை சேர்ந்த லோகநாதன் (வயது 54) என்பவர் கேரளா மாநில லாட்டரி சீட்டினை வெள்ளை தாளில் எழுதி ஆசை வார்த்தை கூறி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, லோகநாதனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!