அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது

அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட சிவக்குமார் , ராமசாமி

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

அப்போது செம்புளிசாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 72) என்பவர் 40 மதுபாட்டில்களும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 48) என்பவர் 28 மதுபாட்டில்களும் பையில் போட்டு வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 68 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!