டி.என்.பாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4பேர் கைது

டி.என்.பாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4பேர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வேட்டுவன்புதூர் பகுதியில் வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி வந்த வீட்டின் உரிமையாளரான ஏளூர் வேட்டுவன்புதூரை சேர்ந்த குமாரசாமி (வயது62), கொடிவேரி நடுப்பாளையத்தை சேர்ந்த செந்தில் (வயது 38), ரஞ்சித்குமார் (வயது 28), முருகேசன் (வயது 37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டினையும், ரூ.30ஆயிரத்து 150 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி