வீட்டின் உரிமையாளரை கரண்டியால் குத்திய கட்டிட தொழிலாளி

வீட்டின் உரிமையாளரை கரண்டியால் குத்திய கட்டிட தொழிலாளி
X

சரவணன்.

அம்மாபேட்டை அருகே திமுக பிரமுகரை கரண்டியால் குத்திய கட்டிட தொழிலாளயை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை செங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 53). பேரூராட்சி முன்னாள் திமுக செயலாளர். விஜயகுமார் வீட்டில் தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று இரவு 7 மணி அளவில் இவரது வீட்டில் வேலை பார்க்கும் கட்டிட தொழிலாளி குள்ளனூரைச் சேர்ந்த சரவணன் (வயது 28) என்பவர் வந்துள்ளார்.

நாளை வெளியில் வேலைக்கு செல்வதால் மட்டப்பலகை மற்றும் கரண்டி எடுத்துச் செல்கிறேன் எனக் கூறினார். அப்போது, விஜயகுமாரிடம் தன்னை இருசக்கர வாகனத்தில் மெயின் ரோட்டுக்கு கொண்டு வந்து விடுமாறு சரவணன் கூறியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த கட்டிட தொழிலாளி சரவணன் திடீரென காரக்கரண்டியை எடுத்து விஜயகுமாரின் மார்பில் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் சரவணனை பிடித்து எதற்காக குத்தினார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!