வனப்பகுதியில் கிளிகளை பிடித்த இருவர் கைது

வனப்பகுதியில் கிளிகளை பிடித்த இருவர் கைது
X

பைல் படம்.

அந்தியூர் வனச்சரக பகுதியில் கிளிகளை பிடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தரசாமி தலைமையில் வனத்துறையினர் ரோந்து, பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லைன் மாரியம்மன் கோவில் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த இரண்டு நபர்களை விசாரித்ததில், அவர்கள் வனப்பகுதியில் இருந்து இரண்டு கிளிகளை பிடித்தது தெரியவந்தது. விசாரணையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குமார் (வயது 40) மற்றொருவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வேலு (வயது 60) என்பதும் தெரியவந்தது. மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்து, குமார் என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், வேலு என்பவருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!