சென்னிமலை அருகே பா.ஜனதா பிரமுகரின் நாய்களை விஷம் வைத்து கொன்ற தொழிலாளி கைது!

சென்னிமலை அருகே பா.ஜனதா பிரமுகரின் நாய்களை விஷம் வைத்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி கலைவாணி. இவர் பா.ஜனதா கட்சியில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர்களது வீடு சொக்கநாதபாளையம் பகுதியில் ஒரு தோட்டத்துக்குள் உள்ளது. வீடு தனியாக இருப்பதால் பாதுகாப்புக்காக 4 நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 14ம் தேதி காலையில் ஒரு நாய் வாந்தி எடுத்த நிலையில் வீட்டின் அருகே இறந்து கிடந்தது. மேலும் 2 நாய்கள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சென்னிமலை போலீசார் நடத்திய விசாரணையில், நாய் விஷம் கலந்த உணவினை சாப்பிட்டு இறந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தின் அருகில் உள்ள இடங்களை சோதனை செய்தபோது, எல்பிபி வாயக்க்கால் கரையில் குருணை மருந்து கலந்த கோழி இறைச்சியின் தோல்கள் மற்றும் குருணை மருந்துகள் சிதறி கிடந்தது. மேலும், உணவளிக்கும் தட்டில் குருணை மருந்து கலந்ததற்கான தடயமும் கிடைத்தது. தொடர்ந்து, காணாமல் போன இரண்டு நாய்களில், ஒரு நாயின் உடல் அருகில் உள்ள தோட்டத்து கால்வாய் புதரில் கண்டுபிடிக்கப்பட்டு, உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, இதுசம்மந்தமாக அப்பகுதியில் குடியிருந்து வரும் மரம் ஏறும் தொழிலாளி பொன்னுசாமி என்பவரது மகன் பழனிச்சாமி என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழனிச்சாமி வளர்த்து வந்த கோழிகளை நாய்கள் அடிக்கடி தோட்டத்திற்குள் புகுந்து கடித்து கொன்றதில் இதுவரை சுமார் 30 கோழிகள் இறந்துவிட்ட காரணத்தால், அதை கோழி இறைச்சிகளில் குருணை மருந்து கலந்து வாய்க்கால் பகுதியில் வீசியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu