பெருந்துறை அருகே கஞ்சா, போதைப்பொருள் விற்ற நைஜீரியாவை சேர்ந்தவர் கைது!

பெருந்துறை அருகே கஞ்சா, போதைப்பொருள் விற்ற நைஜீரியாவை சேர்ந்தவர் கைது!
X
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கஞ்சா, போதைப்பொருள் விற்ற நைஜீரியா நாட்டை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை அருகே கஞ்சா, போதைப்பொருள் விற்ற நைஜீரியா நாட்டை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜோன்ஸ் (வயது 44) என்பதும், விஜயமங்கலம் சங்குநகரில் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது கஞ்சா, போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜோன்சை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும், ஒரு கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story
ai tools for education