அந்தியூரில் மதுக்கடையில் தகராறு: தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது!

அந்தியூரில் மதுக்கடையில் தகராறு: தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மதுக்கடையில் தகராறில் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூரில் மதுக்கடையில் தகராறில் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஜர்த்தல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). தொழிலாளி. இவர் தனது நண்பர் மற்றும் அவருடைய உறவினருடன் மது பாட்டில்கள் வாங்குவதற்காக தவுட்டுப்பாளையத்தில் உள்ள மதுக்கடையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த நாய்க்குட்டி என்கிற விக்னேஷ். பாபு (25) மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் அங்கு வந்து சரவணன் உள்ளிட்ட 3 பேரிடம், எங்களை மது வாங்க வழி விடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்து சரவணனை, பாபு உள்பட 4 பேர் சேர்ந்து பீர் பாட்டிலால் அடித்தும் மற்றும் உதைத்தும் உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சரவணன் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு (வயது 25) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Next Story
நவீன தொழில்நுட்ப பயிற்சியில்  500 விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு!  வாழை வளர்ப்பு பயிற்சி முகாம் வெற்றி!