பவானியில் வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது: ரூ.8.56 லட்சம் பறிமுதல்

பவானியில் வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது: ரூ.8.56 லட்சம் பறிமுதல்
X
ஈரோடு மாவட்டம் பவானியில் வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.8.56 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

பவானியில் வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.8.56 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கி, ஆன்லைன் மூலம் லாட்டரி எண்களை வெள்ளை நிற துண்டு சீட்டில் எழுதி செல்போன் மூலம் அனுப்பி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தபோது பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள ஜீவா நகரைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் சரவணன் (33), லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பவானி போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டதோடு, லாட்டரி விற்பனை உறுதியானது. இதைத் தொடர்ந்து, சரவணனைக் கைது செய்த பவானி போலீசார், லாட்டரி விற்பனை செய்த பணம் ரூ.8.56 லட்சம் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், ஏற்கெனவே சரவணன் லாட்டரி விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர் என்பதும், தற்போது இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story