ஈரோட்டில் சரக்கு வாகனத்தில் கடத்திய 1,075 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

ஈரோட்டில் சரக்கு வாகனத்தில் கடத்திய 1,075 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
X

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி கைதான அர்த்த நாரீஸ்வரன்.

ஈரோட்டில் சரக்கு வாகனத்தில் 1,075 கிலோ ரேஷன் அரிசி கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் சரக்கு வாகனத்தில் 1,075 கிலோ ரேஷன் அரிசி கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு -காங்கேயம் சாலையில் மூலப்பாளையம் அருகே ரேஷன் அரிசியை விற்பனைக்காக கடத்தி செல்வதாக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சுதா, உதவி ஆய்வாளர் மேனகா தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 1,075 கிலோ ரேஷன் அரிசி விற்பனைக்காக கடத்தி செல்லப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு அருகே வெண்டிபாளையத்தைச் சேர்ந்த அர்த்த நாரீஸ்வரன் (வயது 40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். பின்னர் அர்த்த நாரீஸ்வரனிடம் இருந்து 1,075 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story
Similar Posts
மெய்நிகர் இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் பற்றி காண்போம்
5ஜி தொழில்நுட்பம் அப்டினா என்ன ,அது எப்படி செயல்படுகிறது   வாங்க பாக்கலாம்
வந்துடுச்சி அரையாண்டு தேர்வு..! மன இறுக்கத்திலிருந்து மாணவர்களைக் காப்பாற்றுவது எப்படி?
கல்லீரல் பிரச்னையா? யோகா பண்ணா போதுமா? இத தெரிஞ்சிக்கோங்க..!
எப்போதும் ஆன்லைனில் இருக்கீங்களா..? அப்போ உங்களுக்கு இதுமாறி பிரச்சனை பாருங்க..!
தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஆசிரியை மனு
5ஜி தொழில்நுட்பம் பல விஷயங்களின் இணையத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது
தினம் ஒரு மாம்பழம் சாப்பிடுங்க .. அப்புறம் உங்க உடம்புல என்னென்ன மாற்றம் நடக்கும் பாருங்க..!
சவுந்தர்யாவின் அழகுக்கு காரணம் இந்த மூணும் தான்..! நீங்களும் டிரை பண்ணுங்க..!
குழு திட்டப்பணிகளில் தொழில்நுட்பத்தின் தாக்கம்: மாணவர்களின் ஒத்துழைப்புக்கு எவ்வாறு மாறி உள்ளது
பவானியில் நாளை (டிச.5) முதல் டிச.8ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்
கோபி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம்!
விஜய் மாதிரி திடீர்னு வெயிட் போட்டீங்களா? அஜித் மாதிரி சிக்குன்னு ஆக சூப்பர் டிப்ஸ்..!
டெய்லியும் நீங்க வெவ்வேற டைம்ல தூங்குனா என்ன ஆகும் தெரியுமா..?