கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது: ரூ.1.42 லட்சம், கார், லேப்டாப் பறிமுதல்!

கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது: ரூ.1.42 லட்சம், கார், லேப்டாப் பறிமுதல்!
X
ஈரோடு மாவட்டம் கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.42 லட்சம், கார் , லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.42 லட்சம், கார் , லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கேரளா லாட்டரி விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி கொங்கர்பாளையம் அரக்கன் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, கள்ளிப்பட்டி ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த வெங்கடேஷ் (43) என்பவர் செல்போனில் ஆன்லைன் மூலமாக லாட்டரியை (சிக்கிம் லாட்டரி) கள்ளிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்தது தெரிந்தது.

இதை அடுத்து வெங்கடேஷ்-ஐ பிடித்த போலீசார் அவரிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.

அதேபோல், டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி பாரதி வீதியை சேர்ந்த பழனிச்சாமி (71) என்பவர் அதே பகுதியில் கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து பழனிச்சாமி-யை பிடித்த பங்களாப்புதூர் போலீசார் அவரிடம் இருந்து 1 செல்போன் மற்றும் 84 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.

மேலும், டி.என்.பாளையம் அருகேயுள்ள அரக்கன் கோட்டை சத்தியமங்கலம்-அத்தாணி மெயின் ரோட்டை சேர்ந்த பழனிச்சாமி (66) என்பவர் அதே பகுதியில் கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதனை தொடர்ந்து, பழனிச்சாமி-யை பிடித்து 1 செல்போன், 120 கேரளா லாட்டரி சீட்டுகள் மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரத்து 640 ரூபாய் ரொக்க பணத்தையும் பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து பழனிச்சாமி-ஐ கைது செய்தனர்.

இதுபோல், சத்தியமங்கலம் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் காரில் வந்த 4 பேரை பிடித்து விசா ரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் சத்தியமங்கலம் வரதம்பாளையத்தை சேர்ந்த கோல்டன் ஜோசப் (வயது 43), காந்திநகரை சேர்ந்த டிக்சன் (33), வடக்குப்பேட்டையை சேர்ந்த துரைசாமி (66), தேள்கரடு வீதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (40) என்பதும், அவர்கள் சத்தியமங்கலம் காந்தி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்றதும், தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 லேப்டாப், 2 பிரிண்டர், 1 கம்ப்யூட்டர், கார். ரூ.11,300 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story