கடம்பூர் அருகே மான் கறி, நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

கடம்பூர் அருகே மான் கறி, நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட பழனிச்சாமி , வெள்ளிங்கிரி (படம்: எஸ்.கோகுல்கிருஷ்ணன்) 

சத்தியமங்கலம், கடம்பூர் அருகே மான் கறி மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வன சரகத்திற்குட்பட்ட கரளயம் , உகிணியம் பிரிவு , காணகுந்தூர் , பவளக்குட்டை பகுதிகளில் சிறப்பு தனிப்பிரிவு மற்றும் மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பெரும்பள்ளம் அணை அருகே உள்ள காட்டில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்த சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தை சேர்ந்த ஐயப்பன் மகன் வெள்ளியங்கிரி (25) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


இதனையடுத்து, அதே பகுதியில் தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கே.என்.பாளையம் சாவடி வீதியை சேர்ந்த பழனிச்சாமி (62) என்பவர், குடிசை வீட்டில் சுமார் 10 கிலோ அளவிலான மான் கறியை வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து காய்ந்த நிலையில், இருந்த மான் கறியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் தனிப்பிரிவு போலீசார் பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி