பவானி அருகே பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம்: 10 மணி நேரத்தில் கொலையாளி கைது

பவானி அருகே பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம்: 10 மணி நேரத்தில் கொலையாளி கைது
X
பவானி அருகே நேற்று முன்தினம் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தில் 10 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமிநகர் அருகே உள்ள கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி வளர்மதி (வயது 55). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கணேசன் நேற்று சொந்த வேலை காரணமாக பவானி சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வளர்மதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த கணேசன் அலறி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்-பக்கத்தினர் இதுகுறித்து, சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கணகேஸ்வரி , பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் வளர்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்தும், 3 தனிப்படைகள் அமைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.


இந்நிலையில், தனிப்படை போலீசார் கொலை நடத்த வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது. பின்னர், போலீசார் விசாரணையில், லட்சுமிநகர் பகுதியை சேர்ந்த ராஜா என்கிற நிக்கோலஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை தேடி வந்தனர். அப்போது, காளிங்கராயன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ராஜாவை சித்தோடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜாவின் மாமா எட்வின் சுந்தரம் என்பவரும், பேராசிரியர் கணேசன் இவரும் நண்பர்கள், பின்னர், ராஜா பேராசிரியரின் குடும்பத்தினரும் பழகி வந்துள்ளார். அவசர தேவைக்காக 3 ஆயிரம் பணம் கேட்டு வளர்மதி தர மறுத்ததால், கத்தியால் அவரை கொலை செய்து விட்டு 6 பவுன் நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து 6 பவுன் நகையை மீட்டனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக, சிசிடிவி கேமரா மூலம் கொலையை 3 தனிப்படை அமைத்து 10 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்ததற்கு, கோவை சரக டிஐஜி முத்துசாமி பாராட்டியுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!