ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளை

ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளை
X
ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான உணவகம் அதேப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மொத்தம் 6 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணிக்கு வியா பாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் கடையில் வேலை பார்க்கும் மாஸ்டர் உணவகத்தை திறக்க வந்த போது உணவகத்தில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். ராஜேந்திரன் வேகமாக உணவகத்திற்கு வந்து கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்றபோது உணவகத்தில் பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தன. கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.48 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருப்பதைக்கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

கடையில், சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு இருந்தாலும் அவை கடந்த சில நாட்களாக வேலை செய்யாமல் இருந்ததால் உணவகத்திற்குள் புகுந்து கொள்ளையடித்த நபரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த துணிகர திருட்டு குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Similar Posts
தாளவாடி வட்டத்தில் நாளை (மார்ச் 19) நடைபெற இருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தேதி மாற்றம்
ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்
ஈரோடு மாவட்டத்தில் 39 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க ஆணை: ஆட்சியர் வழங்கினார்!
ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளை
சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு விழா குழுவினர் மனு
கோடை வெயிலின் விளைவாக ஏரிகள் மேய்ச்சல் நிலங்களாக மாறுவதற்கு காரணம்
வரி கட்டாததால் குடிநீர் இணைப்பு கட்
வாக்காளர் அட்டையை ஒப்படைத்து மக்கள் போராட்டம்
மரவபாளையத்தில் மின்கம்பங்களை மாற்றக் கோரி மக்கள் போராட்டம்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
அண்ணாமலை கைது: பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் அதிரடி ஆர்ப்பாட்டம்
காலாவதி குளிர்பானம் விற்பனை, 12 கடைகளுக்கு அபராதம்