சென்னிமலையில் கட்டிட தொழிலாளி பிணம்: கல்லால் தாக்கி கொலையா.?

சென்னிமலையில் கட்டிட தொழிலாளி பிணம்: கல்லால் தாக்கி கொலையா.?
X
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சந்தை பேட்டையில் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாரா.? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை சந்தை பேட்டையில் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாரா.? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சந்தை பேட்டையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்தவர்கள் சென்னிமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் , பிணமாக கிடந்தவர் சென்னிமலை ஈங்கூர் ரோடு திருநகர் காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கணேசன் (48) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, நேற்று இரவு அறச்சலூர் ரோடு அண்ணமார் தியேட்டர் அருகிலுள்ள, அரசு மதுபான கடையில் நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு வீட்டுக்கு செல்லவில்லை என தெரிய வந்தது.

இந்நிலையில், தலையில் பலத்த ரத்த காயங்கள் உடன் கணேசன் கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பதுடன், பிணத்தின் அருகில் இரண்டு கற்கள் கிடந்தது. சம்பவ இடத்தில் பெருந்துறை டி.எஸ்.பி கோகுல கிருஷ்ணன் தலைமையில், சென்னிமலை காவல் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து, நடந்த விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணேசனை கொலை செய்திருக்கலாம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Next Story
ai robotics and the future of jobs