சத்தியமங்கலத்தில் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை

வக்கீல் சுசீந்தர்.
சத்தியமங்கலத்தில் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ரங்கசமுத்திரம் கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் சுசீந்தர் (வயது 38). சத்தியமங்கலத்தில் வக்கீலான பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பிரபாவதி. இவர் உக்கரம் சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுசீந்தர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசீந்தரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu