அந்தியூரில் ஜெராக்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் பணம் திருட்டு

அந்தியூரில் ஜெராக்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் பணம் திருட்டு
X

திருட்டு (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஜெராக்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தியூரில் ஜெராக்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கோபிநாத் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் ஷட்டரை நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டு, கண்காணிப்பு கேமராவையும் ஆப் செய்துவிட்டு கோபிநாத் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் சென்று பார்த்தபோது கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தை காணவில்லை.

இதுகுறித்து கோபிநாத் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற பிறகு மர்மநபர் அங்கு சென்று ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பித்து சென்றது தெரியவந்தது.

மேலும் அருகே உள்ள மற்ற கடைகளில் வெளியே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story