ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபர்: போலீசார் விசாரணை

ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபர்: போலீசார் விசாரணை
X

பாழடைந்த வீட்டில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் ஒடிசா மாநில வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் ஒடிசா மாநில வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் எந்தவித பயன்பாட்டில் இல்லாமல், நீண்ட ஆண்டுகளாக பாழடைந்த பழைய ரயில்வே காலனி குடியிருப்பு உள்ளது. இங்கு ரயில்வே பணியாளர்கள் யாரும் தங்காததால் இங்குள்ள வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

இதுதவிர, இந்த பாழடைந்த வீடுகளுக்குள் சமூக விரோதிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது வசதிக்கு ஏற்றார் போல் பெண்களை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும், அங்கு மது பிரியர்கள் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், அங்கு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்தவரின் கழுத்து பகுதி நெரிக்கப்பட்ட நிலையிலும், ஒரு கையில் வெட்டுக்காயம் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் காவிரி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. போலீசார் விசாரணையில் இறந்தவர் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் அருகே உள்ள துன்பகாடா கிராமத்தை சேர்ந்த ஜெகநாத் ஹபல் என்பவருடைய மகன் டன்டபனி ஷபர் ( 31) என்பது தெரியவந்தது.

ஈரோட்டில் அவர் எங்கு தங்கி இருந்தார். என்ன வேலை செய்து வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டன்டபனி ஹபல் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது மதுபோதையில் அவரை மர்ம நபர்கள் யாரேனும் கழுத்தை நெரித்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Similar Posts
ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபர்: போலீசார் விசாரணை
செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா: பவானியில் நாளை (மார்ச் 5ம் தேதி) போக்குவரத்து மாற்றம்
கோபி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியா் ஆய்வு
குடிநீர் வழங்கலுக்கு முக்கியத்துவம் – அமைச்சர் ராஜேந்திரன் ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
திமுக மாமன்ற உறுப்பினரின் கணவர் பணம் கேட்டு மிரட்டல்
சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் உத்தரவை மீறியதற்கான விளக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை
பணியில் இருந்த எஸ்.ஐ., வீரமுத்து மரணம்
கடத்தப்பட்ட 17 வயதான மாணவி திருமண கோலத்தில் மீட்பு
புதிய பஸ் ஸ்டாண்டில் 25 கடைகள் திறக்காமல் பூட்டிக்கிடக்கின்றன
திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்தில் புதிய குடியிருப்பு கட்டடத்திற்கு பூஜை
திருச்செங்கோடு நகராட்சி 33வது வார்டில் புதிய அங்கன்வாடி மைய திறப்பு
குமாரபாளையம் நகர பா.ஜ. அலுவலகம் திறப்பு