பவானி: அம்மாபேட்டை அருகே எரிந்த நிலையில் கிடந்த ஸ்கூட்டர்; போலீசார் விசாரணை!

பவானி: அம்மாபேட்டை அருகே எரிந்த நிலையில் கிடந்த ஸ்கூட்டர்; போலீசார் விசாரணை!
X
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே ஸ்கூட்டர் எரிந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே ஸ்கூட்டர் எரிந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பந்தல் கரடு பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். இங்கு, கொடம்பக்காடு செல்லும் சாலையில் ஒரு ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் அங்கு சென்ற போலீசார் எரிந்த நிலையில் கிடந்த ஸ்கூட்டரை பார்வையிட்டனர்.

ஸ்கூட்டர் யாருடையது?, மர்ம நபர்கள் எங்கேயாவது திருடிக்கொண்டு வந்து போலீசில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக தீ வைத்து எரித்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக கொண்டு வந்து எரிக்கப்பட்டதா? என்று எந்த விவரமும் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story