கோபி அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு!

கோபி அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு!
X
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

கோபி அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊர் நல அலுவலராக உள்ளவர் புவனேஷ்வரி. இவருக்கு வரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து, புவனேஷ்வரி அங்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 24) என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியது தெரிந்தது.

இதையடுத்து, புவனேஷ்வரி அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story